Recent

murungai keerai benefits in tamil | முருங்கை கீரை பயன்கள் நன்மைகள்










 murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள் முருங்கை கீரை நன்மைகள் முருங்கை மரத்தின் இலைகளையே ‘முருங்கை கீரை’ என்று கூறுகிறோம். முருங்கை கீரையை இதரக் கீரை வகைபோலச் சமைத்துச் சாப்பிட்டு வருகின்றனர். முருங்கை கீரை உடல் நலத்துக்குச் சிறந்தது. இதனை அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் பேதியாகும். இதனைப் பகல் நேரத்தில்தான் சாப்பிட வேண்டும்.

முருங்கை கீரையை பெரும்பாலும் தேங்காய், பருப்பு, மிளகாய் சேர்த்து இளம்சூட்டில் புரட்டிச் சாப்பிடுவார்கள். இது மிகவும் சுவையானது. இதில் வைட்டமின் A, B, C போன்ற சத்துக்களுடன் கண்ணாம்பு சத்தும் இரும்பு சத்தும் சேர்ந்துள்ளது.

கீரையில் நிறைய வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் இருப்பதால், அது உடலை நன்றாக வளரச் செய்யும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் நல்ல எல்லா பலத்தைத் தரும்.

கண் சம்பந்தமான கோளாறுகளையும் குணப்படுத்தும். பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளையும் முருங்கை கீரை பூரணமாகக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள்.

முருங்கை வியத்தகு பயனை அளிக்கக் கூடியதாகும். இது மர வகையைச் சார்ந்ததாகும். இதன் பூக்கள் இளமஞ்சள் அல்லது வெள்ளை மத்தில் கொத்துகொத்தாகப் பூக்கும். இதன் காய்கள் நீளமாக இருக்கும்.

பொதுவாக எல்லாரும் முருங்கைக் கீரையையும், முருங்கைக் காயையும் சமையலில் சேர்த்துக் கொள்வது வழக்கம். ஆகையால் முருங்கையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது.

முருங்கையின் இலை, பூ, காய், விதை, வேர், பட்டை என அனைத்துமே மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன.

இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின் – B, வைட்டமின் – B2, வைட்டமின் – C ஆகிய சத்துகள் அடங்கியுள்ளனன. இந்தக் கீரையை சமையலில் வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டுவந்தால் இரும்புச் சக்தி குறைபாடுகளினால் ஏற்படக்கூடிய நோய்கள் குணமாகும்.

அத்துடன் பெண்களுக்கு வரும் சோகை, காமாலை, உப்புச் சத்துக் குறைபாடு போன்ற நோய்களும் குணமாகும்.

இந்தக் கீரையைப் பகல் நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில் உபயோகிக்கக் கூடாது. காலையில் சமையல் செய்து அதனை இரவில் சாப்பிட்டால் பேதியாகும்.

முருங்கைக் கீரையை நாம் உணவாகச் சமைத்துச் சாப்பிடுகிறோம். அதே நேரத்தில் பல வியாதிகளைக் குணப்படுத்தும் பச்சிலை மூலிகையாகவும் பயன்பட்டு வருகிறது.

முருங்கைக் கீரையை அடிக்கடி உபயோகித்தால் உடல் நாகு செயல்படும்.

நரம்புகள் வலிமைவறும்.

வயிறு, குடல், கல்ரேல், மண்ணீரல், சிறுங்கம் இவைகள் எல்ணம் சீரான இயக்கத்தைப் பெறும்.

முருங்கைக் கீரையை – எள்ளு புண்ணாக்குடன் சேர்த்து சமையல் செய்து உணவுடன் சேர்த்துக் கொண்டுவந்தால் நீரிழிவு நோய் அகன்றுவிடும்.

தலைவலி, தொண்டை வலி, சயித்தியம் போன்றவைகளுக்கு இந்த இலையின் சாற்றுடன் மிளகு சேர்த்து, அரைத்துப் பற்றுப் போட்டால் இத்துன்பங்கள் பறந்து போகும்.

கண் நோய் உடையவர்கள் இந்த இலையைச் சிறிது சுத்தமான விடும், கையில் காக்கி இரண்டு சொட்டு கண்ணில் விட்டால் கண் நோய் அகன்று

இரும்புச் சத்துக் குறைபாடுகளினால் உண்டாகும் நோய்களுக்கு முருங்கைக்கீரையைப் பயன்படுத்தினால் அக்குறைபாடுகள் நீங்கும்.

சன் தியரன தொண்டைக்கம்மனால் பேசமுடியாமல் தரைவாக இவர்களுக்கு முருங்கைக் கீரை சாறுடன் சிறிது சுண்ணாம்பு, தேன் ஆகியவற்றைச் சேர்த்து குழைத்துத் தொண்டை குழியில் தடவினால் இந்நோய் அகன்று விடும்.

கண் பார்வை தெளிவடையும். வயோதிகம் வரை தேகத்தின் மேலுள்ள தோல் சுருக்கமடையாமல் வழுவழுப்புடனிருக்கும்.

பற்கள் உறுதியாக இருக்கும். பல் சம்பந்தப்பட்ட எந்தக் கோளாறும் ஏற்படாது.

வயோதிகக் காலத்திலும் நரம்புகள் முறுக்குடனிருக்கும். சோர்வின்றி நடைபோட முடியும்.

பிறரைத் தொற்றக் கூடிய எந்த வியாதியும் தொற்ற முடியாது. இரத்தத்தைச் சுத்தமாக வைத்திருக்கும்.

இருதயத் துடிப்பை இயற்கை அளவில் வைத்திருக்கும். தசைகள் பலப்படும்; சுருங்காது.

நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.

முருங்கை கீரையுடன், கோழி முட்டையையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். நல்ல இரத்தம் விருத்தியாகும்.

முருங்கை கீரை – சாம்பார், கூட்டு, பொரியல், மோர்க்குழம்பு ஆகிய முறையில் சமையல் செய்து சாதத்துடன் சேர்த்துக் கொண்டால் எண்ணப்பன்களையும் பெறலாம் murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள்..

முருங்கையீர்க்கு:- முருங்கையீர்க்கை எடுத்துக் கொண்டு இதனுடன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து கொதிக்க சூப் செய்து குடிக்க காய்ச்சல், கைகால்வலி, மூட்டுவலி, ஆஸ்துமா, மார்புசளி, தலைவலி ஆகியவை குணமாகும்.

முருங்கைக்காய்:- முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம்-1 சிட்டிகை சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வர செரிமான கோளாறுகளான மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.

முருங்கைப்பூ:- முருங்கைப்பூ ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி காலையில் உணவிற்கு முன் சாப்பிட்டு வர ஆண்மை தன்மையை அதிகரிக்கும். ஆண் மலடு நீங்கும். மேலும், கண் எரிச்சல், உடற்சூடு ஆகிய வற்றை குணமாக்கும், கண்பார்வைத் திறனை அதிகரிக்கும்.

மேலும், முருங்கைப்பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்திவந்தால் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் இருப்பவர்களுக்கு நாட்டம் உண்டாகும். இதை இயற்கையான வயகரா எனக் கூறலாம்.

முருங்கைப்பட்டை:- முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம்குறையும்.

முருங்கைவேர்:- முருங்கைவேர் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் விக்கல், இரைப்பு, உடல் வலி, கைகால்வலி குறையும்.

முருங்கைப்பிசின்:- முருங்கை பிசின் நீற்ற விந்துவை இறுக்கும். உடலுக்கு அழகு உண்டாகும். விந்துவைப்பெருக்கும். சிறுநீரை தெளிய வைக்கும்.

முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன் தருகிறது.

முருங்கைக்கீரையின் அற்புதங்கள்

மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் உள்ளது. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் ‘சி’ உள்ளது

முருங்கை மருந்தாகும் விதம்:- முருங்கை இலைச்சாற்றுடன் 10 மிலி சம அளவு எலுமிச்சை சாறு சேர்த்து அன்றாடம் காலை வேளையில் குடித்து வருவதால் சத்துக்குறைபாடு, ரத்தசோகை, இருமல், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோலின் வறட்சி குணமாகும்.

முருங்கை இலைச்சாற்றுடன் தேனும் இளநீரும் சேர்த்துக் குடிப்பதால் இழந்த உடல் ஆரோக்கியமும் பலமும் திரும்பக் கிடைக்கும். நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தவுடன் முருங்கைக் கீரையோடு இரண்டு பல் பூண்டு, சிறிது மஞ்சள், உப்பு, மிளகு இவைகளை சேர்த்து அரைத்து உள்ளுக்கு சிறிது கொடுப்பதுடன் கடிப்பட்ட இடத்தில் சிறிதளவு தடவிவர நஞ்சு முறியும். புண்ணும் விரைவில் ஆறும்.

முருங்கைப்பூ பிஞ்சான உடன் சேகரித்து தோலோடு சமைத்து சாப்பிட்டு வர மிகுந்த உடல் வெப்பம் தணிந்து ஆண்மை அதிகரிக்கும். முருங்கைப் பட்டையை இடித்து சாறெடுத்து அதனுடன் குப்பைமேனி சாறு சேர்த்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி சொறி, சிரங்கு, கரப்பான் ஆகிய தோல் நோய்களின் மீது பூசிவர விரைவில் குணமாகும்.

கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தூங்கச் செல்லும் முன் முருங்கைக் கீரைச்சாறும் தேனும் கலந்து கொடுத்தால் பார்வை கூர்மை பெறும்.


Share on Google Plus

About Benifits Ulagam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment